பெலோப்பிடாசு (Pelopidas, இறப்பு கிமு 364) என்பவர் ஒரு குறிப்பிடத்தகுந்த தீபன் அரசியல்வாதியும் தளபதியும் ஆவார். நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தீபன் மேலாதிக்கத்தை நிறுவுவதில் கருவியாக இருந்தார். பெலோப்பிடாசு ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர். பெரும் செல்வத்தைக் கொண்டிருந்தவராக இருந்தார். இவர் தன் நண்பர்களுக்காகவும் பொதுச் சேவைக்காகவும் பங்காற்றினார். அதே நேரத்தில் இவர் ஒரு விளையாட்டு வீரரைப்போன்ற கடினமான வாழ்க்கையை வாழ்வதில் மனநிறைவு அடைந்தார்.கிமு 384 இல், இவர் மான்டினியா முற்றுகையின் போது எசுபார்த்தன்களுக்கு ஆதரவாக அனுப்பப்பட்ட தீபன் குழுவில் பணியாற்றினார். அங்கு இவர் ஆர்க்காடியன்களால் காயப்படுத்தப்பட்டார். ஆபத்தான முறையில் காயமடைந்த இவர் எபமினோண்டாசு, அஜெசிபோலிஸ் ஆகியோரால் காப்பாற்றப்பட்டார்.மேலும்...
1971–மா சே துங்கின் இரண்டாவது தளபதி லின் பியாவோ இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து சீனாவை விட்டு வெளியேறினார். இவர் சென்ற விமானம் மங்கோலியாவில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
பெருந்தோற்றத்திற்கான முக்கியமான காரணம், மூளையில் உள்ள “கபச் சுரப்பி” எனப்படும் சுரப்பி அதிக அளவில் வளர்ச்சி இயக்குநீரைச் சுரப்பது ஆகும்.
அரச பயங்கரவாதம் எனும் சொல் ஓர் அரசாங்கம் தமது நாட்டில் தமது மக்கள் மீதே கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும்.
போகர் என்பவர் பதினெண் சித்தர்களுள் தனிச் சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், மெய்யியலாளராகவும் அறியப்படுகிறார். இவரது காலம் கிமு 500-கிமு 100 ஆகும். தமிழிலும், சீன மொழியிலும் பல நூல்களை இயற்றியுள்ளார்.
தானியங்கி எழுதுகோல் ஒரு மனிதரின் கையொப்பத்தை நகலெடுத்து இடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஓர் இயந்திரம். 1930-களில் இது உருவாக்கப்பட்டது.
அ. மணிகண்டன், தனியார் துறையில் பணிபுரிந்து வரும் இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். 2015 ஆம் ஆண்டு முதல் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். தொடக்கத்தில் குறைந்தபட்சம் 100 அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் எழுத முனைந்தார், ஆனால் அவர் எழுதிய முதலிரண்டு கட்டுரைகள் விக்கிப்பீடியாவின் கொள்கையோடு பொருந்தவில்லையென நிராகரிக்கப்பட்டன. அதன் பின்பு, தெர்மோவெல் என்ற அறிவியல் சார்ந்த கட்டுரையில் எழுதப் பயின்று, தொடருந்து சந்திப்பு நிலையங்கள் உள்ளிட்ட எளிய அட்டவணைகளைப் பொருளடக்கமாகக் கொண்ட கட்டுரைகளை எழுதுவதன் மூலம் விக்கியின் கொள்கைகளைப் புரிந்து கொள்ளத் தொடங்கினார். அன்றாடப் பணிச்சூழ்நிலையில் பயன்படுத்தும் எளிய அறிவியல் பொருட்கள், பயணத்தில் காணும் பொருட்கள் ஆகியவற்றை ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யத் தொடங்கினார். இதுவரை இருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்டக் கட்டுரைகளைப் புதிதாகத் தொடங்கியதுடன், பல்வேறு கட்டுரைகளில் காணப்படும் பிழைகளைக் கண்டறிந்து, பிழை திருத்தமும் செய்து வருகிறார். விக்கிப்பீடியாவிற்கான கலைக்களஞ்சியக் கட்டுரைகளை எழுதுவதன் மூலம், அவர்தம் பணிச்சூழலில் தரவு சார்ந்து எழுதுவதற்கு இந்த அனுபவம், இவருக்குப் பெரிதும் உதவுகிறது என்று தெரிவிக்கிறார்.
பசிபிக் கடற்பறவை லாரிடே என்ற கடல் புறா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது ஆத்திரேலியாவின் கடற்கரைகளைப் பூர்வீகமாகக் கொண்டது. மேற்கில் மேற்கு ஆத்திரேலியா, கார்னவோனுக்கும், கிழக்கில் சிட்னிக்கும் இடையிலான கடற்கரையோரப் பகுதியிலும், தசுமேனியா மற்றும் தெற்கே உள்ள பிற தீவுகளிலும் இது மிதமான அளவில் காணப்படுகிறது. இவை 58 முதல் 66 சென்டிமீட்டர் (23 முதல் 26 அங்குலம்) வரை நீளமும், 137 முதல் 157 சென்டிமீட்டர் (54 முதல் 62 அங்குலம்) வரை இறக்கை விரிவும் கொண்டவை. இதன் உணவில் மீன்கள், நண்டுகள், மணல் தட்டைமீன்கள், தலைக்காலிகள் போன்ற முதுகெலும்பற்ற உயிரினங்கள் அடங்கும். இந்தப் பசிபிக் கடற்பறவை, தசுமேனியாவில் உள்ள மோல்டிங் கடற்காயலில் புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,90,225 கட்டுரைகள் உள்ளன.மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.