2026 நேபாளம்-திபெத்து வெள்ளப்பெருக்கு

(2026 நேபாள வெள்ளப்பெருக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2026 நேபாளம்-திபெத்து வெள்ளப்பெருக்கு (2026 Nepal–Tibet floods) என்பது 26 ஆகத்து 2026 அன்று காலையில், நேபாளத்தில் உள்ள திரிசூலி ஆற்றில்[c] ஏற்பட்ட கடுமையான தொடர் வெள்ளப்பெருக்காகும். இதனால் ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் உள்ள பல குடியிருப்புகளும், சீனா-நேபாள எல்லையில் உள்ள கியிரோங் வணிக நுழைவு வாயிலாயில் கட்டடங்கள் வெள்ளத்தில் பெரும் சேதமடைந்தன. இந்த திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்தின. இதில் நேபாளத்தில் குறைந்தது 157 பேரும், சீனாவில் 3 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உட்பட 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், ரசுவா, நுவாகோட், தாடிங் தாடிங், கோர்கா, சித்வான் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆற்றுப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2026 நேபாள வெள்ளப்பெருக்கு
Map
நாள்26 ஆகத்து 2026 (2026-08-26)
அமைவிடம்ரசுவா மாவட்டம் மற்றும் நுவாகோட் மாவட்டம், நேபாளம், திபெத் தன்னாட்சிப் பகுதி, சீனா
வகைதிடீர் வெள்ளப்பெருக்கு
காரணம்பனிப்பாறை வெடிப்பு
இறப்புகள்273+[a]
காணாமல் போனோர்1,384+[b]
சொத்து சேதம்நீர் மின் நிலையங்கள், வீடுகள், பாலங்கள், சாலைகள், அணைகள், வணிக வளாகங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள்.

பின்னணி

தொகு
போட்டே கோசி ஆறு (இடது) மற்றும் லெண்டே கோலா ஆறு (வலது); மிதேரி எல்லைப் பாலம் கட்டுமானத்தில் உள்ளது (2013)

திரிசூலி ஆறு[d] சீனாவில் உள்ள திபெத் தன்னாட்சிப் பகுதியின் கீரோங் கவுண்டியிலிருந்து உருவாகும் லெண்டே கோலா (லெண்டே ஆறு என்றும் அழைக்கப்படுகிறது) ஆற்றோடு இணைகிறது. பின்னர், இது துஞ்சே பகுதியைக் கடந்து பாய்ந்து திரிசூலி ஆற்று அமைப்பின் ஒரு பகுதியாக மாறுகிறது.[3][4]

காரணம்

தொகு

வெள்ளப்பெருக்கிற்கான சரியான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. நீரின் வரத்து திபெத்தின் மேல்நிலைப் பகுதியிலிருந்து தொடங்கியதாகக் கூறிய மாவட்ட அதிகாரி சிசிர் கனல், அதிகரித்து வரும் நீர்மட்டம் திரிசூலி ஆற்றிலும் பரவக்கூடும் என எச்சரித்தார்.[5] தொடக்கக்கட்ட மதிப்பீடுகளின்படி, நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவே இந்த வெள்ளத்திற்கு காரணம் என்று நேபாள வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேபாள-திபெத் எல்லையிலிருந்து சுமார் 25 km (16 mi) தொலைவில் திபெத்தில் mb 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை பதிவு செய்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட நேரம் மற்றும் திபெத் எல்லைச் சோதனைச் சாவடியின் பாதுகாப்புக் புகைப்படக் கருவிகளின் பதிவுகளின் அடிப்படையில், இவ்விரண்டிற்கும் இடையே ஏழு நிமிடங்கள் இடைவெளி இருந்தது கண்டறியப்பட்டது. லெண்டே கோலா ஆற்றில் ஏற்பட்ட பனிச்சரிவே இந்த வெள்ளத்திற்குக் காரணம் என்று ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.[1][6][7] இதற்கு முந்தைய ஆண்டின் போட்டேகோசி ஆற்று வெள்ளத்திற்குத் திபெத்தில் உள்ள பனிப்பாறை ஏரி உடைந்ததே காரணம் எனக் கூறப்பட்டது.[8]

இப்பகுதியில் சீனா செயற்கை அணைகளைக் கட்டியதே திடீர் வெள்ளப்பெருக்கிற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம் என்று எக்ஸ் (ட்விட்டர்) போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயிரிழப்புகள்

தொகு

பாக்மதி பிரதேச காவல்துறையின் தகவல்படி, நேபாளத்தில் குறைந்தது 270[2] பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 600 உள்ளூர் நபர்கள் காணாமல் போயியுள்ளனர்.[9] நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட முதற்கட்டத் தகவல்களின்படி, 579 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 466 பேர் வெளிநாட்டவர்கள்.[10] காணாமல் போனவர்களில் 47 பேர் அமெரிக்கர்கள் என்றும்,[11] தென்கொரியாவினைச் சேர்ந்தவர்கள் 8 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[12] இந்தியாவினைச் சேர்ந்த 105 பேர்களில், 59 கைலாசா யாத்திரை பக்தர்கள் உள்ளிட்ட 37 வெளிநாடு வாழ் இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர்.[13] எல்லைக் காவல் சாவடியில் பணியிலிருந்த 9 ஆயுதமேந்திய காவல் படையினரும் காணாமல் போயுள்ளனர்.[14][15]

கீரோங் துறைமுக எல்லைக் கடப்புப் பகுதியில் திபெத் பக்கத்திலும் மக்கள் காணாமல் போயுள்ளதாக சீனாவின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.[16]

சேதங்கள்

தொகு

நுவாகோட் மாவட்டத்தில் பெட்ராவதி, திரிசூலி, துங்கே மற்றும் தேவிஹாட்ட உள்ளிட்ட வணிகப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. சொத்துக்களுக்குப் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சேத மதிப்பீடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.[17][18]

நேபாளத்தில் குடியிருப்புகள், சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் கடுமையாகச் சேதமடைந்தன.[16]

மின் உற்பத்தி, பகிர்மானம் மற்றும் விநியோகக் கட்டமைப்புகளில் ஏற்பட்ட சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது. ரசுவாகடி, சிலிமே, திரிசூலி 3A, திரிசூலி 3B ஹப் 220 கேவி துணை மின்நிலையம், திரிசூலி நீர்மின் நிலையம் மற்றும் தேவிஹாட்ட நீர்மின் நிலையம் உள்ளிட்ட ஆறு முக்கிய நீர்மின் மற்றும் மின் விநியோக மையங்கள் சேதமடைந்துள்ளதாக நேபாள மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.[19]

நிவாரண நடவடிக்கைகள்

தொகு

நேபாள அரசு, நேபாள இராணுவம், ஆயுதமேந்திய காவல் படை மற்றும் நேபாள காவல்துறையினரை உலங்கு வானூர்தி மற்றும் மருத்துவக் குழுக்களுடன் இணைத்துத் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது.[20][21] மீட்பு பணியின் காரணமாக 88 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.[22]

காணாமல் போனவர்களைக் கண்டறியும் முயற்சிகளைத் தொடருமாறும், பேரிடர் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துமாறும் சீன அதிபர் சீ சின்பிங் கேட்டுக்கொண்டுள்ளார்.[23]

பெருவின் வெளியுறவு அமைச்சகம் சீனா, நேபாளத்திற்குத் தனது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. மேலும், பாதிக்கப்பட்டவர்களில் பெரு நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றும் அது குறிப்பிட்டது.[24] 1970-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பெருவின் யுங்காய் நகரத்தைப் புதைத்த பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவைச் சமூக வலைத்தளங்களில் மக்கள் நினைவு கூர்ந்தனர்.[25]

குறிப்புகள்

தொகு
    • 270 நேபாளத்தில்
    • 3 சீனாவில்[1][2]
    • 826 நேபாளத்தில்
    • 558 சீனாவில்
  1. நேபாளத்தில் உள்ள திரிசூலி ஆற்றின் மேல் பகுதி "போதேகோஷி ஆறு" என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு கிழக்கே 65 கி.மீ தொலைவில் இதே பெயரில் அமைந்துள்ள மற்றொரு பெரிய ஆறான "போதேகோஷி ஆறு" இதனால் பாதிக்கப்படவில்லை.
  2. நேபாளத்தில் திரிசூலி ஆற்றின் மேல் பகுதி போட்டே கோசி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. இதன் கிழக்கே 65 கி.மீ தொலைவில் உள்ள போட்டே கோசி என்னும் மற்றொரு பெரிய ஆறு இதிலிருந்து வேறுபட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1 2 "More than 1,300 are missing in Nepal and Tibet after catastrophic floods caused by glacial collapse". Associated Press. 2026-08-26 இம் மூலத்தில் இருந்து 27 August 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260827043057/https://apnews.com/article/climate-change-nepal-tibet-glacier-collapse-floods-61b592d428e4631add31ce052d0daf1f.
  2. 1 2 "Nepal-Tibet: More than 800 missing in Nepal as authorities say glacier collapse triggered flash flood". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2026-08-27. Retrieved 2026-08-27.
  3. "ரசுவாமா भीषण बाढी, मुग्लिङसम्म सतर्कता" (in ne). BBC. 26 August 2026. https://www.bbc.com/nepali/articles/c3wjp107jy9o.
  4. Goldsmith, Adam; Atkinson, Simon (27 August 2026). "Two teenagers, 13 and 14, among 33 UK nationals missing in Nepal floods". BBC. Retrieved 27 August 2026.
  5. "Flash flood hits Rasuwa, damages hydropower projects and markets". kathmandupost.com (in English). Retrieved 2026-08-26.{{cite cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. ANSS . U.S. Geological Survey. 
  7. "Hundreds missing after deadly floods hit Nepal-Tibet border". Helsinki Times. 26 August 2026. https://www.helsinkitimes.fi/world-int/29199-hundreds-missing-after-deadly-floods-hit-nepal-tibet-border.html.
  8. "'It came suddenly': Nepal flood kills 9, leaves hundreds of tourists missing". South China Morning Post (in ஆங்கிலம்). 2026-08-26. Retrieved 2026-08-26.
  9. "At least 95 dead and more than 600 missing due to the floods in northern Nepal, near the border with China". Democrata. 26 August 2026. https://www.democrata.es/en/international/expansion-at-least-95-dead-and-more-than-600-missing-due-to-the-floods-in-northern-nepal-near-the-border-with-china/.
  10. "Girl, 13, among dozens of Britons missing in Nepal flash floods". த டெயிலி டெலிகிராப். 26 August 2026. https://www.telegraph.co.uk/world-news/2026/08/26/britons-missing-nepal-flash-floods/.
  11. "Hundreds missing, including 47 Americans, in deadly Nepal floods, local officials say". Yahoo News (in அமெரிக்க ஆங்கிலம்). 2026-08-26. Retrieved 2026-08-26.
  12. "8 Koreans missing, 10 stranded in flood in Nepal". The Korea Times. Yonhap. 26 August 2026. https://www.koreatimes.co.kr/world/20260826/8-koreans-missing-10-stranded-in-flood-in-nepal.
  13. "Nepal flash flood from Tibet leaves 17 dead, 105 Indians missing". India Today. 26 August 2026. https://www.indiatoday.in/world/story/nepal-flash-flood-tibet-rockslide-rasuwa-105-indians-missing-ptag-2980484-2026-08-26.
  14. Devkota, Govinda (26 August 2026). "Bhotekoshi flood: What we know, what remains unclear". The Kathmandu Post. Retrieved 2026-08-26.
  15. "Nepal flooding latest: 12 from UK among hundreds missing after deadly flash floods hit border area, tourism board says". Sky News. 26 August 2026. https://news.sky.com/story/nepal-tibet-flooding-latest-almost-300-foreign-nationals-among-hundreds-missing-tourism-board-says-13575720.
  16. 1 2 Sharma, Gopal (26 August 2026). "Nepal flash flood kills eight; damages roads, power projects". Reuters. Retrieved 26 August 2026.
  17. "Flood Damages Property in Nuwakot Due to Rasuwa Border Overflow". english.ratopati.com (in Nepali). Retrieved 2026-08-26.{{cite cite web}}: CS1 maint: unrecognized language (link)
  18. Thompson, Angus; Hoyle, Craig; Dahal, Phanindra; Bicker, Laura (2026-08-26). "Flash flood on Nepal-Tibet border kills at least 95, with hundreds of foreign tourists missing". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2026-08-26.
  19. "Rasuwa flood damages 6 major hydropower, transmission facilities, disrupts power supply". Nepal News. Kathmandu. 26 August 2026. Retrieved 26 August 2026.
  20. "Flood leaves parts of Rasuwa and Nuwakot cut off - OnlineKhabar English News" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2026-08-26. Retrieved 2026-08-26.
  21. "Rasuwa flashflood: NA teams, two choppers deployed for search, rescue". GorakhaPatra. Retrieved 2026-08-26.
  22. Dahal, Phanindra; Bicker, Laura (2026-08-26). "Hundreds missing and 98 dead as flash flood hits Nepal-Tibet border". BBC News. Retrieved 2026-08-26.
  23. "Hundreds missing and many feared dead after massive flash flood hits Nepal-China border". CNN. 26 August 2026. Retrieved 26 August 2026.
  24. "Perú expresa su solidaridad con China y Nepal por devastadoras inundaciones" [Peru Expresses Solidarity with China and Nepal Following Devastating Floods]. Tv Perú (in ஸ்பானிஷ்). 26 August 2026. Retrieved 26 August 2026.
  25. "¿Por qué la tragedia en Nepal volvió tendencia a Yungay en Perú? El catastrófico evento que recordó el aluvión de 1970" [Why did the tragedy in Nepal make Yungay in Peru trend again? The catastrophic event that brought back memories of the 1970 flood]. La República (in ஸ்பானிஷ்). 26 August 2026. Retrieved 26 August 2026.