இந்தி

இந்திய மொழி

இந்தி (Hindi, हिन्दी, நவீன தரநிலை இந்தி: मानक हिन्दी) அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று.[10] இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவண் அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.[11] பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம், இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது.

இந்தி
हिन्दी
"இந்தி" என்ற சொல் தேவநாகரியில்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்தில்லி, வடக்கு மேற்கு உத்தரப் பிரதேசம், தெற்கு உத்தராகண்டம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
முதல்மொழி: 345 மில்.[a]  (2011 கணக்கெடுப்பு)[1][2]
இரண்டாம் மொழி: 264 மில். (2020)[2]
மொத்தம்: 610 மில். (2011–2020)[2]
ஆரம்ப வடிவம்
  • தேவநாகரி (அதிகாரபூர்வம்)
  • கைதி மொழி (வரலாற்று)
  • மகசானி (வரலாற்று)
  • இலந்தா (வரலாற்று)[4]
  • தேவநாகரி பிரெயில்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
மொழி கட்டுப்பாடுமத்திய இந்தி இயக்குநரகம்[8]
மொழிக் குறியீடுகள்
ISO 639-1hi
ISO 639-2hin
ISO 639-3hin
மொழிக் குறிப்புhind1269[9]
Linguasphere59-AAF-qf
{{{mapalt}}}
2011 கணக்கெடுப்பில், இந்தியாவில் இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் பரவல்

பரவல்

தொகு

இந்தி இந்தியாவின் வட பகுதி முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான்,[12] அரியானா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது. பிற இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு நீங்கலாக, இரண்டாவது/மூன்றாவது மொழியாக மும்மொழி திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறது.

பேச்சு இந்தி

தொகு

எண்கள்

தொகு
  1. - ஏக் (एक) = ஒன்று
  2. - 'தோ (दो) = இரண்டு
  3. - தீன் (तीन) = மூன்று
  4. - சார் (चार) = நான்கு
  5. - பாஞ்ச் (पांच) = ஐந்து
  6. - சே (छः) = ஆறு
  7. - சாத் (सात) = ஏழு
  8. - ஆட் (आठ) = எட்டு
  9. - நௌ (नौ) = ஒன்பது
  10. - தஸ் (दस) = பத்து

100 - சௌ (सौ) = நூறு

1000 - ஹசார் (हजार) = ஆயிரம்

பொதுவானவை

தொகு
  • நமஸ்தே = வணக்கம்
  • கித்னா = எத்தனை ?
  • ஊப்பர் = மேலே - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது ஊப்பர் சீட் - மேற்படுக்கை).
  • நீச்சே = கீழ் - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது நீச்சே சீட் - கீழ்ப்படுக்கை).
  • ஜாயேகா? = போகுதா? போகுமா?- எ.கா பூபசண்டா 'சாயேகா? - பூபசண்டாரா போகுதா?)
  • ச்சாயேகா ? = வேண்டுமா ? எ.கா ச்சா சாயேகா ? - தேநீர் வேண்டுமா ?
  • கிஸ் தரஃப் - எந்தப் பக்கம்? எ.கா கிஸ் தரஃப் ஜாயேகா - எந்தப் பக்கம் போகும் ?
  • கத்தம் ஹோகயா = முடிவடைந்து விட்டது.
  • கல் - நேற்று (அல்லது) நாளை
  • ஆப்கா நாம் க்யா ஹை = உங்கள் பெயர் என்ன?
  • மேரா நாம் ராம் ஹை = என் பெயர் ராம்.
  • மே தும்ஸே ப்யார் கர்தா/கர்தீ ஹூ = நான் உன்னை காதலிக்கிறேன்.
  • டீக் ஹை = சரி
  • தன்யவாத் = நன்றி

எழுத்துக்கள்

தொகு

இந்தி மொழி தேவநாகரி (देवनागरी लिपि தேவநாகரி லிபி) எழுத்துகளில் எழுதப்படுகிறது. தேவநாகரி உயிரொலிகளையும், 33 மெய்யொலிகளையும் கொண்டுள்ளது. இது இடது பக்கத்தில் இருந்து வலமாக எழுதப்படுகிறது.

இந்தி சொற்களும் அவற்றின் தமிழ் கருத்துக்களும்

தொகு
தமிழ்இந்திதமிழ் கருத்து
பாபுबापूஅப்பா
மா(ன்)माँஅம்மா
பாயிभाईசகோதரன்
பஹன்बहनசகோதரி
பையாभैयाஅண்ணன்
தீதீदीदीஅக்கா
மே(ன்)मैंநான்
இந்தி சொற்களும் அதன் தமிழ் கருத்துக்களும் [a]
இந்தி தமிழ் தமிழ் கருத்து
बिजली பிஜ்லீ மின்சாரம்
क्रय க்ரய வாங்குதல்
खोलना கோல்னா திறத்தல்
पूर्व பூர்வ கிழக்கு
वाहन வாஹன் கார், வாகனம்
लाल லால் சிவப்பு
घोड़ा கோடா குதிரை
कुछ नहीं குச் நஹீ ஒன்றும் இல்லை
पक्षी பக்ஷீ பறவை
गर्म கர்ம் சூடு
जब ஜப் அப்போது
कहानी की भाषा கஹானீ கீ பாஷா பேச்சு மொழி
पतला खान பத்லா கான் மெல்லிய கான்
बुद्धा புத்த புத்தர்
काला காலா கறுப்பு
शीतल ஷீதல் குளிர்
खरगोश கர்கோஷ் முயல்
ईर्ष्या ஈர்ஷ்யா பொறாமை
सुनना ஸுன்னா கேள்
तथ्य தத்ய உண்மை
कछुआ கச்சுஆ ஆமை
चित्र சித்ர சித்திரம்
लड़ाई லடாஈ சண்டை, போர்
रस्सी ரஸ்ஸீ கயிறு
बहुत करीब பஹுத் கரீப் மிக நெருக்கமான, உறவு
लोहा லோஹா இரும்பு, உலோகம்
छवि சவி படம்
समूह ஸமூஹ் சமூகம்
मोड़ மோட் திரும்பு
भयानक பயானக் கெட்ட, பயங்கரமான
मस्तिष्क மஸ்திஷ்க் மூளை
मुर्गा முர்கா கோழி
कीमत கீமத் விலை
हंसी ஹன்ஸீ சிரிப்பு
हवा ஹவா காற்று
आम कमरा ஆம் கம்ரா பொதுவறை, அலுவலகம்
शोर ஷோர் சத்தம், குரல்
पठन பட்ன படித்தல்
शरीर ஷரீர் உடல்
बिन्दु பிந்து புள்ளி
बिल्ली பில்லீ பூனை
मकड़ी மக்டி பூச்சி
पुराना புராணா பழைய
कर सकता கர் சக்தா முடியும், இணைதல்
दस हजार தஸ் ஹஜார் பத்தாயிரம்
चोर சோர் திருடன்
निखात निधि நிகாத் நிதி புதையல்
देश தேஷ் நாடு
दवा தவா மருந்து
दो जोड़ी தோ ஜோடீ இரண்டு சோடி
संबंध ஸம்பந்த் தொடர்பு

குறிப்புகள்

தொகு
  1. தங்கள் மொழியை 'இந்தி' என்று குறிப்பிட்ட இந்தி மற்றும் அது தொடர்பான பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Scheduled Languages in descending order of speaker's strength - 2011" (PDF). தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். 29 June 2018.
  2. 1 2 3 வார்ப்புரு:E28
  3. 1 2 Hindustani (2005). கீத் பிரவுன் [in ஆங்கிலம்] (ed.). மொழி மற்றும் மொழியியல்க் கலைக்களஞ்சியம் (2 ed.). Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-044299-4. {{cite book}}: Invalid |ref=harv (help)
  4. Gangopadhyay, Avik (2020). Glimpses of Indian Languages. Evincepub publishing. p. 43. ISBN 978-93-90197-82-8.
  5. "Constitution of the Republic of South Africa, 1996 – Chapter 1: Founding Provisions". www.gov.za. Retrieved 6 December 2014.
  6. "Abu Dhabi includes Hindi as third official court language". The Hindu. 10 February 2019. https://www.thehindu.com/news/international/abu-dhabi-includes-hindi-as-third-official-court-language/article26229023.ece.
  7. "Hindi Speaking Union Act" (PDF). www.culture.govmu.org.
  8. "About Us". Central Hindi Directorate. Archived from the original on 4 May 2012. Retrieved 18 February 2014.
  9. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Hindi". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  10. "தேசிய தகவல் மையம்". Archived from the original on 2006-11-07. Retrieved 2005-07-10.
  11. நடுவன்அரசின் அலுவலக மொழி
  12. Hindi (2005). கீத் பிரவுன் [in ஆங்கிலம்] (ed.). மொழி மற்றும் மொழியியல்க் கலைக்களஞ்சியம் (2 ed.). Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-044299-4. {{cite book}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

தொகு
இந்தி பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இந்திப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தி&oldid=4516201" இலிருந்து மீள்விக்கப்பட்டது