1-குளோரோயெத்தில் குளோரோபார்மேட்டு

வேதிச் சேர்மம்

1-குளோரோயெத்தில் குளோரோபார்மேட்டு (1-Chloroethyl chloroformate) என்பது C3H4Cl2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் எத்தில் தொகுதியில் ஒரு குளோரோ தொகுதி பதிலீடாகக் கொண்ட எத்தில் குளோரோபார்மேட்டின் கட்டமைப்பை இச்சேர்மம் கொண்டுள்ளது. இரண்டு ஆடியெதிர் உருக்களை இச்சேர்மம் பெற்றுள்ளது. மூன்றாம் நிலை அமீன்களின் என்-ஆல்க்கைலேற்றம் நீக்க வினைக்கு இதைப் பயன்படுத்தப்படலாம்.[1]

1-குளோரோயெத்தில் குளோரோபார்மேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-குளோரோயெத்தில் கார்பனோகுளோரிடேட்டு
வேறு பெயர்கள்
α-குளோரோயெத்தில் குளோரோபார்மேட்டு
இனங்காட்டிகள்
50893-53-3 Y
ChemSpider 454726
EC number 256-834-2
InChI
  • InChI=1S/C3H4Cl2O2/c1-2(4)7-3(5)6/h2H,1H3
    Key: QOPVNWQGBQYBBP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 521305
  • ClC(OC(Cl)C)=O
UNII 2L3UG3R4FD
பண்புகள்
C3H4Cl2O2
வாய்ப்பாட்டு எடை 142.96 g·mol−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

தயாரிப்பு

தொகு

1-குளோரோயெத்தில் குளோரோபார்மேட்டை, பென்சைல் டிரைபியூட்டைலமோனியம் குளோரைடு[2] அல்லது பல்வேறு பிற வினையூக்கிகள்[3] முன்னிலையில் அசிடால்டிகைடுடன் பாசுச்சீன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்க முடியும்.

பயன்கள்

தொகு

1-குளோரோயெத்தில் குளோரோபார்மேட் ஒரு பயனுள்ள வினைப்பொருள் ஆகும். உதாரணமாக, மூன்றாம் நிலை அமீன்களின் என்-ஆல்க்கைல் குழு நீக்க வினைக்கு, குறிப்பாக தடயவியல் விசாரணைகளுக்காக மருந்து வளர்சிதை மாற்றப் பொருட்களை உருவாக்குவதற்காக அவற்றை மெத்தில் நீக்கம் செய்வதற்கும் இது பயன்படுகிறது.[1][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1 2 Olofson, R. A.; Martz, Jonathan T.; Senet, Jean Pierre; Piteau, Marc; Malfroot, Thierry (1984). "A new reagent for the selective, high-yield N-dealkylation of tertiary amines: Improved syntheses of naltrexone and nalbuphine". The Journal of Organic Chemistry 49 (11): 2081–2082. doi:10.1021/jo00185a072.
  2. Flosser, David A.; Olofson, Roy A. (2003). "Improved Synthesis of Dialkylaminopyrrolines". Synthetic Communications 33 (12): 2045–2052. doi:10.1081/SCC-120021030. https://archive.org/details/synthetic-communications_2003_33_12/page/2045.
  3. 1 2 Armstrong, Alan (2001). "1-Chloroethyl Chloroformate". Encyclopedia of Reagents for Organic Synthesis. doi:10.1002/047084289X.rc102. ISBN 0-471-93623-5.
  4. Pelander, Anna; Ojanperä, Ilkka; a. Hase, Tapio (1997). "Preparation of N-demethylated drug metabolites for analytical purposes using 1-chloroethyl chloroformate". Forensic Science International 85 (3): 193–198. doi:10.1016/S0379-0738(96)02088-9. https://archive.org/details/sim_forensic-science-international_1997-03-14_85_3/page/192.