1,4-பென்சீன்யிருகார்பனைல் குளோரைடு
1,4-பென்சீன்யிருகார்பனைல் குளோரைடு (1,4-benzenedicarbonyl chloride) என்பது C8H4Cl2O2என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தெரிப்தலோயில் குளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. தெரெப்தாலிக் அமிலத்தின் அசைல் குளோரைடான இச்சேர்மம் அறை வெப்பநிலையில் ஒரு வெண்மை நிறத் திடப்பொருளாகக் காணப்படுகிறது. கெவ்லார் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இரண்டு முன்னோடிப் பொருட்களில் இதுவும் ஒன்றாகும். மற்றொன்று பாரா-பீனைலீன் டையமீன் ஆகும். செயல்திறன் பாலிமர்கள் மற்றும் அரமைடு இழைகளில் இச்சேர்மம் ஒரு முக்கிய அங்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. அங்கு இது தீயெதிர்ப்புத் தன்மை, வேதிப்பொருட்களுக்கு எதிரான எதிர்ப்பு, வெப்பநிலை நிலைத்தன்மை, குறைந்த எடை மற்றும் மிக அதிக வலிமை ஆகியவற்றை வழங்குகிறது. ஒரு திறமையான நீர் நீக்கியாகவும் இச்சேர்மம் செயல்படுகிறது. ஐசோசயனேட்டுகள் மற்றும் யூரித்தேன் முன் பலபடிகளை நிலைப்படுத்தப் பயன்படுகிறது.
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்சீன்-1,4-இருகார்பனைல் இருகுளோரைடு[1] | |
| வேறு பெயர்கள்
தெரிப்தலோயில் இருகுளோரைடு[1] 1,4-பென்சீன்யிருகார்பனைல் குளோரைடு பென்சீன்-1,4-இருகார்பனைல் குளோரைடு தெரிப்தாலிக் அமில இருகுளோரைடு பாரா-தலோயில் குளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 100-20-9 | |
| ChemSpider | 7207 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 7488 |
| |
| UNII | G247CO9608 |
| பண்புகள் | |
| C8H4Cl2O2 | |
| வாய்ப்பாட்டு எடை | 203.02 கி/மோல் |
| தோற்றம் | வெண் திண்மம் |
| அடர்த்தி | 1.34 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 81.5 முதல் 83 °C (178.7 முதல் 181.4 °F; 354.6 முதல் 356.1 K) |
| கொதிநிலை | 265 °C (509 °F; 538 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
தயாரிப்பு
தொகுதெரிப்தாலிக் அமிலம் டைகுளோரைடு, 1,4-பிசு(முக்குளோரோமெத்தில்)பென்சீன் மற்றும் தெரிப்தாலிக் அமிலம் ஆகியவற்றிற்கு இடையிலான வினையின் மூலம் 1,4-பென்சீன்யிருகார்பனைல் குளோரைடு வணிகரீதியாகத் தயாரிக்கப்படுகிறது.[2]
- C6H4(CCl3)2 + C6H4(CO2H)2 →
2 C6H4(COCl)2 + 2 HCl
இருமெத்தில் தெரிப்தாலேட்டை குளோரினேற்றம் செய்வதன் மூலமும் இதைப் பெறலாம்.[3]
பயன்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- 1 2 Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 797. doi:10.1039/9781849733069-FP001. ISBN 978-0-85404-182-4.
- ↑ Pfoertner, Karl-Heinz (2005), "Photochemistry", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a19_573
- ↑ EP patent 0095698, "VerfahrenzurHerstellung von Terephthalsäure- und Isophthalsäuredichlorid", published 1983-12-07
