1,2-இருகுளோரோ-1,1,2-முப்புளோரோயீத்தேன்

வேதிச் சேர்மம்

1,2-இருகுளோரோ-1,1,2-முப்புளோரோயீத்தேன் (1,2-Dichloro-1,1,2-trifluoroethane) என்பது C2HCl2F3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மமானது கார்பன், ஐதரசன், குளோரின் மற்றும் புளோரின் ஆகிய தனிமங்களால் ஆன எளிதில் ஆவியாகக்கூடிய திரவ குளோரோபுளோரோ ஆல்க்கேன் ஆகும். இதன் கட்டமைப்பு வாய்பாட்டை CClF2CHClF என்று அடையாளப்படுத்தலாம். ஆர்-123 என்ற குறியீட்டுடன் ஒரு குளிரூட்டியாகவும் இது அறியப்படுகிறது.[1]

1,2-இருகுளோரோ-1,1,2-முப்புளோரோயீத்தேன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,2-இருகுளோரோ-1,1,2-முப்புளோரோயீத்தேன்
வேறு பெயர்கள்
ஆர்-123
இனங்காட்டிகள்
354-23-4
ChemSpider 9254
EC number 206-549-4
InChI
  • InChI=1S/C2HCl2F3/c3-1(5)2(4,6)7/h1H
    Key: YMRMDGSNYHCUCL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9631
  • C(C(F)(F)Cl)(F)Cl
UNII K8CR1MEG1D
UN number 3163 1078
பண்புகள்
C2HCl2F3
வாய்ப்பாட்டு எடை 152.93 g·mol−1
அடர்த்தி 1.50
உருகுநிலை −78.0 °C (−108.4 °F; 195.2 K)
கொதிநிலை 29.5 °C (85.1 °F; 302.6 K)
ஆவியமுக்கம் 620.01 மி.மீபாதரசம்
9.55×10−2 வளிமண்டல-கன மீட்டர்/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.327
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

தயாரிப்பு

தொகு

1,1,2-முக்குளோரோ-1,2,2-முப்புளோரோயீத்தேன், கழிவுநீர் சேற்றில் உயிரியல் மாற்றத்திற்கு உட்பட்டு 1,2-இருகுளோரோ-1,1,2-முப்புளோரோயீத்தேன் சேர்மமாக மாற்றப்படுகிறது.[2]

பண்புகள்

தொகு

1,2-இருகுளோரோ-1,1,2-முப்புளோரோயீத்தேனின் மாறுநிலை வெப்பநிலை 461.6 கெல்வின் (188.5 °செல்சியசு; 371.2 °பாரங்கீட்டு) ஆகும். ஒவ்வொரு கார்பன் அணுவிலும் குளோரின் இருப்பதால், மூலக்கூறின் சுழற்சி தடைபடுவதாகத் தெரிகிறது, ஆனால் அதிக வெப்பநிலைகளில் இந்தத் தடை குறைகிறது.[3]

பயன்கள்

தொகு

வேண்டுமென்றே பயன்படுத்தப்படாவிட்டாலும், 1,2-இருகுளோரோ-1,1,2-முப்புளோரோயீத்தேன் என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் 2,2-இருகுளோரோ-1,1,1-முப்புளோரோயீத்தேன் என்ற இதன் மாற்றியனில் ஒரு குறிப்பிடத்தக்க மாசாக உள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Kubota, H.; Yamashita, T.; Tanaka, Y.; Makita, T. (May 1989). "Vapor pressures of new fluorocarbons". International Journal of Thermophysics 10 (3): 629–637. doi:10.1007/BF00507984. Bibcode: 1989IJT....10..629K.
  2. Christian Balsiger; David Werner; Christof Holliger; Patrick Höhener (10 January 2005). "Reductive dechlorination of CFCs and HCFCs under methanogenic conditions" (PDF). Archived from the original (PDF) on 15 July 2020. Retrieved 15 July 2020.
  3. 1 2 Goodwin, A. R. H.; Moldover, M. R. (October 1991). "Thermophysical properties of gaseous refrigerants from speed-of-sound measurements. III. Results for 1,1-dichloro-2,2,2-trifluoroethane (CHCl2-CF3) and 1,2-dichloro-1,2,2-trifluoroethane (CHClF-CClF2)". The Journal of Chemical Physics 95 (7): 5236–5242. doi:10.1063/1.461831. Bibcode: 1991JChPh..95.5236G.

வெளி இணைப்புகள்

தொகு