1,1-இருமெத்தில்யூரியா

1,1-இருமெத்தில்யூரியா (1,1-Dimethylurea) என்பது C3H8N2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். ஒரு யூரியா வழித்தோன்றலான இச்சேர்மம் முனைவுக் கரைப்பானாகவும் கரிம வினைகளில் ஒரு வினையாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு திடப்பொருள், ஆனால் பல்வேறு ஐதராக்சிலி கூட்டுசேர் பொருள்களுடன் இணைந்து குறைந்த உருகுநிலை கொண்ட நல்லுருகு பொருள்களை உருவாக்குகிறது. பல்வேறு வேதியியல் வினைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு நிலையான கரைப்பானாக இச்சேர்மத்தால் செயல்பட முடியும்.[1][2][3][4] அமீன் போன்ற பகுதியாக, மாற்றப்படாத நைட்ரசன், அசைல் ஆலைடுகளுடன் வினைபுரிந்து அசைலூரியாக்களை உருவாக்குதல்,[5] வினைல் ஆலைடுகளுடன் இணைத்தல் வினை, [6]ஆல்டிகைடுகளுடன் பல-கூறு ஒடுக்க வினை உள்ளிட்ட பல்வேறு வினைகளுக்கு ஒரு மின்னனுகவரியாகச் செயல்படும்.[7] மாற்றமடையாத அமைடு போன்ற பகுதி, ஆல்க்கீன்களுடன் ஆக்சிசனேற்ற இணைப்புக்கு உட்பட்டு ஈரைதரோ ஆக்சசோல்களைக் கொடுக்க முடியும்.[8]

1,1-இருமெத்தில்யூரியா
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,1-இருமெத்தில்யூரியா
வேறு பெயர்கள்
என்,என்-இருமெத்தில்யூரியா
இனங்காட்டிகள்
598-94-7 Y
ChemSpider 11244
InChI
  • InChI=1S/C3H8N2O/c1-5(2)3(4)6/h1-2H3,(H2,4,6)
    Key: YBBLOADPFWKNGS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11737
  • CN(C)C(=O)N
UNII I988R763P3
பண்புகள்
C3H8N2O
வாய்ப்பாட்டு எடை 88.11 g·mol−1
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Kotha, Sambasivarao; Ali, Rashid; Srinivas, Venu; Krishna, Nimita G. (2015). "Diversity-oriented approach to spirocycles with indole moiety via Fischer indole cyclization, olefin metathesis and Suzuki–Miyaura cross-coupling reactions". Tetrahedron 71: 129–138. doi:10.1016/j.tet.2014.11.024.
  2. Lu, Jun; Li, Xiao-Tang; Ma, Er-Qian; Mo, Li-Ping; Zhang, Zhan-Hui (2014). "Superparamagnetic CuFeO2 Nanoparticles in Deep Eutectic Solvent: An Efficient and Recyclable Catalytic System for the Synthesis of Imidazo[1,2-a]pyridines". ChemCatChem 6 (10): 2854–2859. doi:10.1002/cctc.201402415.
  3. Imperato, Giovanni; Eibler, Ernst; Niedermaier, Julia; König, Burkhard (2005). "Low-melting sugar–urea–salt mixtures as solvents for Diels–Alder reactions". Chem. Commun. (9): 1170–1172. doi:10.1039/b414515a. பப்மெட்:15726181.
  4. Ilgen, Florian; König, Burkhard (2009). "Organic reactions in low melting mixtures based on carbohydrates and L-carnitine—a comparison". Green Chemistry 11 (6): 848. doi:10.1039/B816551C.
  5. Sobol, Eyal; Bialer, Meir; Yagen, Boris (2004). "Tetramethylcyclopropyl Analogue of a Leading Antiepileptic Drug, Valproic Acid. Synthesis and Evaluation of Anticonvulsant Activity of Its Amide Derivatives". Journal of Medicinal Chemistry 47 (17): 4316–4326. doi:10.1021/jm0498351. பப்மெட்:15294003.
  6. Belfrage, Anna Karin; Gising, Johan; Svensson, Fredrik; Åkerblom, Eva; Sköld, Christian; Sandström, Anja (2015). "Efficient and Selective Palladium-Catalysed C-3 Urea Couplings to 3,5-Dichloro-2(1H)-pyrazinones". European Journal of Organic Chemistry (5): 978–986. doi:10.1002/ejoc.201403405.
  7. Ahamed, Anis; Arif, Ibrahim A.; Moydeen, Meera; Kumar, Radhakrishnan Surendra; Idhayadhulla, Akbar (2018). "In-Vitro Antibacterial and Cytotoxicity Evaluation of Some Novel Tetrazole Derivatives". International Journal of Pharmaceutical Sciences and Research 9 (8): 3322–3327. doi:10.13040/IJPSR.0975-8232.9(8).3322-27.
  8. Wu, Fan; Alom, Nur-E; Ariyarathna, Jeewani P.; Naß, Johannes; Li, Wei (2019). "Regioselective Formal [3+2] Cycloadditions of Urea Substrates with Activated and Unactivated Olefins for Intermolecular Olefin Aminooxygenation". Angewandte Chemie International Edition 58 (34): 11676–11680. doi:10.1002/anie.201904662. பப்மெட்:31211504.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,1-இருமெத்தில்யூரியா&oldid=4409946" இலிருந்து மீள்விக்கப்பட்டது